Home உலகம் அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம் – 14வயது சிறுவன் கைது

அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம் – 14வயது சிறுவன் கைது

0
அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம் - 14வயது சிறுவன் கைது

அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு மாணவர்கள் இரண்டு ஆசிரியர்கள் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை 14 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளான்.பரோ கவுண்டியின் வின்டெரில் உள்ள அப்பலச்சீ பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பாடசாலை வளாகத்தில் உள்ள அதிகாரிகள் அந்த சிறுவனை கைதுசெய்துள்ளனர்.

குறிப்பிட்ட சிறுவன் பாடசாலையில் துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொள்வது எவ்வாறு என இணையத்தில் தேடியமை தொடர்பில் 2023 இல் எவ்பிஐயினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.1900 மாணவர்கள் கல்வி கற்க்கும் பாடசாலையிலேயே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.ஒரிரு நிமிடங்களில் சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் அந்த பகுதிக்கு வந்து சேர்ந்துவிட்டனர்,பாடசாலைக்கு என நியமிக்கப்பட்ட இரண்டு உத்தியோகத்தர்களும் அங்கு காணப்பட்டனர் அவர்கள் உடனடியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சிறுவனை எதிர்கொண்டனர் என ஷெரீவ் தெரிவித்துள்ளார்.அந்த சிறுவன் உடனடியாக சரணடைந்தான் என அவர் தெரிவித்துள்ளார்.


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version