Home » ஏறாவூர் பகுதியில் அதிகாலையில் இடம்பெற்ற கார் விபத்து – சிறுமி உட்பட இருவர் பலி

ஏறாவூர் பகுதியில் அதிகாலையில் இடம்பெற்ற கார் விபத்து – சிறுமி உட்பட இருவர் பலி

by newsteam
0 comments
ஏறாவூர் பகுதியில் அதிகாலையில் இடம்பெற்ற கார் விபத்து - சிறுமி உட்பட இருவர் பலி
4

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த காரொன்று, இன்று (23) அதிகாலை இரண்டாவது மைல் கல் பகுதியில் வேககட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பனை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் காரின் சாரதி மற்றும் அதில் பயணித்த 15 வயது சிறுமி உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மட்டக்களப்பு சின்ன ஊறணி கருவப்பங்கேணி செலியன் வீதி, இரண்டாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஜெந்திரகுமார் சஞ்சய், கருவப்பங்கேணி மற்றும் நாவலர் வீதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியான பிரதீபன் தவஸ்வாணி ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்துவரும் நிலையில், உயிரிழந்த சிறுமியான மகளுடன் கருவப்பங்கேணியில் உள்ள அவர்களது பன்றிவளர்க்கும் பண்ணையை பார்ப்பதற்காக சம்பவதினமான இன்று அதிகாலை கார் சாரதியுடன் பயணித்தபோது கார் வேககட்டுப்பாட்டை மீறி பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவருகிறது.சாரதியும் 15 சிறுமியும் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த சிறுமியின் தாயாரான பாலச்சந்திரன் மோகனகாந்தி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவர்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version