Home » ஒருவார கால பகுதிக்குள் உப்பின் விலையை 50 சதவீதத்தால் குறையவுள்ளது

ஒருவார கால பகுதிக்குள் உப்பின் விலையை 50 சதவீதத்தால் குறையவுள்ளது

by newsteam
0 comments
ஒருவார கால பகுதிக்குள் உப்பின் விலையை 50 சதவீதத்தால் குறையவுள்ளது
9

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 20,000 மெட்ரிக் டன் உப்பு தொகையின் முதல் தொகுதி இன்றிரவு நாட்டை வந்தடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.குறித்த தொகுதி நேற்றே நாட்டை வந்தடையும் என்று முன்னதாக எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும், காலநிலை சீர்கேட்டினால் கப்பல் வருகை தாமதித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், இன்றையதினம் 3,050 மெட்ரிக் டன் உப்பு அடங்கிய தொகுதி இலங்கையை வந்தடையும் என்று தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால தெரிவித்துள்ளார்.
குறித்த தொகையின் ஊடாக நாட்டில் நிலவும் உப்புத் தட்டுப்பாடு தீர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன் ஊடாக எதிர்வரும் ஒருவார கால பகுதிக்குள் உப்பின் விலையை 50 சதவீதத்தால் குறைக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version