Home » கிளிநொச்சியில் 5 ஜீ தொலைத்தொடர்பு கோபுரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்

கிளிநொச்சியில் 5 ஜீ தொலைத்தொடர்பு கோபுரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்

by newsteam
0 comments
கிளிநொச்சியில் 5 ஜீ தொலைத்தொடர்பு கோபுரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்
7

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புன்னைநீராவி பகுதியில், நிறுவப்படுகின்ற 5 ஜீ தொலைத்தொடர்பு கோபுரத்துக்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.குறித்த பகுதியில் 5 ஜீ தொலைத்தொடர்பு கோபுரம் அவசியமற்றது எனவும் இது தங்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேச மக்கள், குறித்த கோபுரத்தை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.இத்தகைய தொலைத்தொடர்பு கோபுரம் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றி முன் அனுபவங்களைச் சுட்டிக்காட்டிய அவர்கள், தங்களது வாழ்வாதாரத்தையும், சுகாதாரத்தையும் இது அபாயத்தில் ஆழ்த்தும், எனவும் தெரிவித்தனர்.இந்தநிலையில், மக்களின் கோரிக்கையைப் பூர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version