முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானபோது கைதுசெய்யப்பட்டார்.அதன்பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.இதன்போது, அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.பல மணிநேர விசாரணைகளின் பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.