Home » கொழும்பு மாவட்டத்தில் தனிநபரின் மாதாந்த செலவு அதிகம் ஆய்வில் தகவல்

கொழும்பு மாவட்டத்தில் தனிநபரின் மாதாந்த செலவு அதிகம் ஆய்வில் தகவல்

by newsteam
0 comments
கொழும்பு மாவட்டத்தில் தனிநபரின் மாதாந்த செலவு அதிகம் ஆய்வில் தகவல்
11

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு தரவுகளைத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.அதன்படி, தனிநபர் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு மாதாந்தம் குறைந்தபட்சம் 16,342 ரூபாய் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.தேசிய மட்டத்தில் இந்த தொகை அறிவிக்கப்பட்டிருந்தாலும், மாவட்டங்களுக்கமைய இந்த தொகையில் மாற்றம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தரவுகளின் அடிப்படையில், 25 மாவட்டங்களில் அதிக செலவினத்தைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு மாவட்டம் அமைந்துள்ளது.கொழும்பு மாவட்டத்தில் தனிநபரின் மாதாந்த செலவு 17,625 ரூபாவாக காணப்படுகின்றது.குறைந்த செலவினத்தைக் கொண்ட மாவட்டமாக மொனராகலை மாவட்டம் பதிவாகியுள்ளது. மொனராகலை மாவட்டத்தில் தனி நபர் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, மாதாந்தம் 16,626 ரூபாய் தேவைப்படுவதாகத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version