Home இலங்கை சாவகச்சேரி வைத்தியசாலையின் வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை

சாவகச்சேரி வைத்தியசாலையின் வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை

0
சாவகச்சேரி வைத்தியசாலையின் வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை

எதிர்காலத்தில் சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை வைத்தியசாலைகளின் வசதிகளை அதிகரிப்பதன் ஊடாக போதனா வைத்தியசாலையின் பணிச்சுமையை மேலும் குறைக்க முடியும் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாணசபையின் பல்வேறு நிதி மூலங்கள் ஊடாக 10 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யப்பட்ட பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு நேற்று வியாழக்கிழமை (30) திறந்து வைக்கப்பட்டது.

அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,நான் கடந்த 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தப் பதவிக்கு வந்தேன்.அப்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் ஓய்வுபெற்ற மூவரே வைத்திய அதிகாரிகளாகப் பணியாற்றினர்.இன்று 350 பேர் பணியாற்றுக்கின்ற நிலைமைக்கு வந்துள்ளது. வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை சாம்பலிருந்தே மீண்டெழுந்திருக்கின்றது.தெல்லிப்பழை, பருத்தித்துறை ஆதார மருத்துவமனைகள் ஓரளவு சிறப்பாக இயங்குகின்றமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நெருக்கடிக்களை குறைக்க முடிந்துள்ளது.

எதிர்காலத்தில் சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை வைத்தியசாலைகளின் வசதிகளை அதிகரிப்பதன் ஊடாக போதனா வைத்தியசாலையின் பணிச்சுமையை மேலும் குறைக்க முடியும்.அத்துடன் ஆளணி மீளாய்வு அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும்.மேலும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திறந்து வைக்கப்பட்ட சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஒட்டுமொத்த வடக்கு மாகாணத்துக்கும் சேவைகளை வழங்கும்.முக்கியமாக கடந்த டிசெம்பர் மாதம் பரவிய எலிக்காய்ச்சலை இங்குள்ள மருத்துவர்கள், தாதியர்கள், சிற்றூழியர்கள் மற்றும் பொதுச் சுகாதாரத்துறையினர் இணைந்து கட்டுப்படுத்தினர்.இது தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு மிகச் சிறந்த பாராட்டைத் தெரிவித்துள்ளது. இது உங்களின் அர்ப்பணிப்பான சேவைக்கு கிடைத்த வெற்றி என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version