Home உலகம் டிரம்புக்கு ரூ.216 கோடி வழங்கும் ‘மெட்டா’ நிறுவனம்

டிரம்புக்கு ரூ.216 கோடி வழங்கும் ‘மெட்டா’ நிறுவனம்

0
Trump

அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் தோல்வி அடைந்தார்.ஆனால் தனது தோல்வியை ஏற்க மறுத்த டிரம்ப், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டினார். அதோடு வன்முறையை தூண்டும் வகையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்தார்.இதன் விளைவாக கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ந்தேதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் பாராளுமன்றத்துக்குள் புகுந்து பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.இதையடுத்து, வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டி டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா முடக்கியது.

இதனால் கோபமடைந்த டிரம்ப், தன் மீது அவதூறு சுமத்தி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை முடக்கியதாக கூறி மெட்டா நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் ஜனாதிபதி ஆகியுள்ள டிரம்ப், கடந்த காலங்களில் தன்னை விமர்சித்தவர்கள் மற்றும் தனக்கு எதிராக செயல்பட்டவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என்கிற அச்சம் நிலவுகிறது.

இதனிடையே மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் தொழிலை சுமூகமாக நடத்துவதற்கு டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளார்.இதன்காரணமாக டிரம்ப் தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருடன் சமரசம் செய்ய மெட்டா நிறுவனம் முன்வந்துள்ளது. அதன்படி வழக்கை முடித்துக் கொள்ள டிரம்புக்கு 25 மில்லியன் டாலர் (ரூ.216 கோடி) வழங்குவதாக மெட்டா நிறுவனம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version