Home உலகம் டொனால்ட் டிரம்ப் தலையீட்டால் இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம்

டொனால்ட் டிரம்ப் தலையீட்டால் இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம்

0
டொனால்ட் டிரம்ப் தலையீட்டால் இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.இரு நாடுகளும் பரஸ்பரம் இராணுவ நிலைகள் மீது தாக்குதல்கள் மற்றும் எதிர் தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தமது x கணக்கில் இதனை குறிப்பிட்டுள்ளார்.”அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நீண்ட இரவு நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்துவதற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொது அறிவு மற்றும் சிறந்த நுண்ணறிவைப் பயன்படுத்தியதற்காக இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள்” என்று அவர் பதிவில் கூறியுள்ளார்.இதற்கமைய பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தாக்குதல்களை நிறுத்த ஒப்புக் கொண்டதாக பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் டார் தனது X கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.அண்மையில் ஜம்மு-காஷ்மீர் – பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டதுடன் 17 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானும் இந்தியாவும் மோதலைத் தொடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version