Home » சீனாவில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கியதில் Payment Failed – மனைவிக்கு கள்ளக்காதல் அம்பலம்

சீனாவில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கியதில் Payment Failed – மனைவிக்கு கள்ளக்காதல் அம்பலம்

by newsteam
0 comments
சீனாவில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கியதில் Payment Failed – மனைவிக்கு கள்ளக்காதல் அம்பலம்
6

சீனாவில் தன்னுடைய மொபைல் பேமென்ட் கோடு (Payment Code) மூலம் கருக்கலைப்பு மாத்திரை வாங்கிய நிலையில், ரூ.200 ரூபாய் Payment Failed ஆனதால், மெடிக்கலில் இருந்து போன் செய்ததால் மனைவிக்கு கள்ளக்காதல் தெரியவந்து, குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள யங்ஜியாங்கில் உள்ள பகுதியில் ஒரு மெடிக்கல் உள்ளது. இந்த மெடிக்கலின் membership card ஒருவர் வைத்துள்ளார். இவர் அந்த மெடிக்கலில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கியுள்ளார். கருத்தடை மாத்திரைக்கான தொகை 200 ரூபாயை மொபைல் Payment Code மூலம் செலுத்திவிட்டு சென்றுள்ளார்.ஆனால் Payment Failed ஆகியுள்ளது. இதனால் மெடிக்கல் ஸ்டாஃப் அவருக்கு போன் செய்துள்ளார். அப்போது அந்த நபரின் போனை, அவரது மனைவி எடுத்துள்ளார். அப்போது மெடிக்கல் ஸ்டாஃப் தாங்கள் செலுத்திய 200 ரூபாய் கிரெடிட் ஆகவில்லை எனத் தெரிவித்துள்ளார். 200 ரூபாய்க்கு என்ன வாங்கினார்? என மனைவி கேட்க, மெடிக்கல் ஸ்டாஃப் கருத்தடை மாத்திரை வாங்கினார் எனக் கூறியுள்ளார்.இதனால் அந்த நபரின் கள்ளக்காதல் மனைவிக்கு தெரியவந்துள்ளது. இது இரண்டு குடும்பத்திலும் கடும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் இரண்டு குடும்பத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தன்னுடைய தனிப்பட்ட தகவலை, மனைவிடம் பகிர்ந்ததற்காக அந்த மெடிக்கல் மீது புகார் அளித்துள்ளார்.என்னதாக இருந்தாலும், அந்த நபர் தன்னுடைய தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும், மெடிக்கல் ஸ்டாஃப் வேண்டுமென்றே தகவலை தெரிவித்துள்ளாரா? என்பது விசாரணையில்தான் தெரியவரும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version