Home » ஜனாதிபதி அனுரகுமார யாழ்ப்பாணம் வருகை – செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட வாய்ப்பு

ஜனாதிபதி அனுரகுமார யாழ்ப்பாணம் வருகை – செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட வாய்ப்பு

by newsteam
0 comments
ஜனாதிபதி அனுரகுமார யாழ்ப்பாணம் வருகை – செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட வாய்ப்பு
9

ஜனாதிபதி அனுரகுமார , யாழ் செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக சாத்தியங்கள் உள்ளதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார எதிர்வரும் முதலாம் திகதி வருகை தரவுள்ளார்.இந்நிலையில் யாழில். புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது, ஊடகவியலாளர் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு முதலாம் திகதி ஜனாதிபதி வருகை தரவுள்ளார்.மக்களின் காணிகள் மக்களிடமே கையளிக்கப்படும் என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும். அது ஜனாதிபதி வருகை தரும் நாள் அன்றோ , அதற்கு முதலோ பின்னரோ நடைபெறலாம்.அதனை எப்ப என தற்போது உறுதியாக கூற முடியாது. ஆனாலும் காணிகள் விடுவிக்கப்படும் என்பது நிச்சயம். செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிடுவாரா என்பதனையும் தற்போது நிச்சயமாக கூற முடியாது.சில வேளைகளில் அவற்றை பார்வையிட சந்தர்ப்பம் உண்டு எனவும் கடற்தொழில் அமைச்சர் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version