Home » நேபாளத்தில் 2 வயது சிறுமி “வாழும் தெய்வம்” ஆக தேர்வு

நேபாளத்தில் 2 வயது சிறுமி “வாழும் தெய்வம்” ஆக தேர்வு

by newsteam
0 comments
நேபாளத்தில் 2 வயது சிறுமி “வாழும் தெய்வம்” ஆக தேர்வு
6

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தலேஜு பவானி திருக்கோயிலில் பருவமடையாத சிறுமிகள் வழிபாட்டுத் தெய்வமாகப் போற்றும் முறை நடைமுறையில் உள்ளது. இவர்கள் குமாரி என்று அழைக்கப்படுவர்.இந்நிலையில் தசரா (தசேன்) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்யதாரா சாக்யா என்ற 2 வயது சிறுமி புதிய குமாரியாக தேர்தெடுக்கப்பட்டார்.பருவமடைந்தவுடன், குமாரி ஒரு சாதாரண மனிதராகக் கருதப்படுவார் என்பது மரபு.எனவே 2017 ஆம் ஆண்டு குமாரியாகப் பதவியேற்ற முன்னாள் குமாரி திரிஷ்ணா சாக்யா (வயது 11) பேருவமடைந்ததன் காரணமாக ஆர்யதாரா சாக்யா புதிய குமாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.புதிய குமாரி ஆர்யதாரா சாக்யா காத்மாண்டுவில் உள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.ஆர்யதாரா சாக்யாவின் தந்தை, தனது மனைவி கர்ப்பமாக இருந்தபோது தெய்வமாக கனவு கண்டதாகவும், தனது மகள் சிறப்புமிக்கவராக இருப்பார் என்று நம்பியதாகவும் கூறியுள்ளார்.2 முதல் 4 வயதுக்குள் உள்ள சிறுமிகள் குமாரிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.குமாரியாக தேர்வு செய்யப்படுவதற்கு பல கட்ட சோதனைகள் நடைபெறும். குறிப்பாக அவரது மனதும், உடலும் வலிமையானதாக இருப்பதைச் சோதனை செய்வர்.இறுதியாக சிறுமிக்கு முன்பாக எருமையை பலியிடுவார்கள். அதனைக் கண்டு அஞ்சாத சிறுமி அடுத்த குமாரியாகத் தேர்வு செய்யப்படுகிறார்.குமாரிகள் அரண்மனைக் கோவிலுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்வார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கல்வி கற்பிக்கப்படும்.குமாரி ஒரு வருடத்துக்கு 13 முறை மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுகிறார்.குமாரியின் கால்கள் தரையில் படுவது பாவச் செயலாகக் கருதப்படுகிறது. எனவே பல்லக்கில் வைத்துச் சுமந்து செல்லப்படுவார்.
ஓய்வுபெறும் குமாரிகளுக்கு அரசு மாத ஓய்வூதியம் வழங்கும். குராமரியாக இருந்து ஓய்வுபெற்ற பெண்களை திருமணம் செய்பவர் விரைவில் இறந்துவிடுவார் என்ற நம்பிக்கை இருப்பதால் பல முன்னாள் குமாரிகள் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்வர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version