Home இலங்கை பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற வேன் மீட்பு – விசாரணை ஆரம்பம்

பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற வேன் மீட்பு – விசாரணை ஆரம்பம்

0
பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற வேன் மீட்பு – விசாரணை ஆரம்பம்

கண்டி மாவட்டம், கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் நேற்று(11) சனிக்கிழமை பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.கடத்தலுடன் தொடர்புடைய வேன் பொலன்னறுவை நகரில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த வாகனம் வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வேனில் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காணொளிகள் வெளியாகியுள்ளது.

இரண்டு பாடசாலை மாணவிகள் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு சிறிய கருப்பு வேனில் வந்த குழுவினர், மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர்.கடத்தப்பட்ட சிறுமி மற்றும் கடத்தலை மேற்கொண்ட நபர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. எவ்வாறாயினும், கடத்தல் ஈடுபட்ட நபர் கடத்தப்பட்ட மாணவியின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.இச்சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் தவுலகல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் கடத்திச்சென்றவர்களை கைது செய்வதற்குரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version