மோட்டார் சைக்கிள்களில் தனியாகச் செல்லும் பெண்களின் கண்களில் மிளகாய் பொடியை வீசி அவர்களின் தங்க நகைகளை கொள்ளையடித்த ஒரு தாய், தந்தை மற்றும் மகன் மஹாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது வாரியபொல, பாதெனிய பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதன்போது தப்பியோடிய தந்தை தலதாகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.முப்பத்து மூன்று வயதுடைய தாய், பதினைந்து வயதுடைய மகன் மற்றும் தாயின் இரண்டாவது திருமணத்தின் கணவனான இருபத்தி இரண்டு வயதுடைய இளைஞன் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட பெண் ஐந்து மாத கர்ப்பிணி என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.