சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை தெற்கு, புத்தூர் வீதியில் நேற்று (2) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞர்களில் ஒருவர் திங்கட்கிழமை (30) மோட்டார் சைக்கிள் ஒன்றினை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் இன்று மாலை மோட்டார் சைக்கிளில் புத்தூர் வீதியால் சென்றுகொண்டிருந்தவேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியில் இருந்த கம்பத்துடன் மோதியது.இதில் படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களும் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.