Home » வவுனியா மாநகர துணை முதல்வர் தலையீட்டினால் வவுனியா – முல்லைத்தீவிற்கிடையிலான இபோசு பஸ் பிரச்சனை தீர்வு

வவுனியா மாநகர துணை முதல்வர் தலையீட்டினால் வவுனியா – முல்லைத்தீவிற்கிடையிலான இபோசு பஸ் பிரச்சனை தீர்வு

by newsteam
0 comments
வவுனியா மாநகர துணை முதல்வர் தலையீட்டினால் வவுனியா – முல்லைத்தீவிற்கிடையிலான இபோசு பஸ் பிரச்சனை தீர்வு
11

வவுனியா புதிய பஸ் நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி காலை 6.30 மணிக்கு பயணிக்கும் வவுனியா வீதிக்கு சொந்தமான இபோச பஸ்ஸின் அளவு சிறியதாக உள்ளதால் பயணிகள் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகின்றனர் என வவுனியா மாநகரசபையின் துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபனுக்கு பொதுமக்களால் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுருந்தது. இதனை கருத்தில் கொண்ட துணை முதல்வர் வவுனியா வீதி முகாமையாளருடன் கலந்துரையாடி போது திங்கட்கிழமை (30) முதல் பயணிகளின் வசதிக்கேற்ப பஸ்ஸொன்றை வழங்குவதாக தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து திங்கட்கிழமை (30) காலை 6.30 மணிக்கு வவுனியா புதிய பஸ் நிலையத்திலிருந்த முல்லைத்தீவு நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்தது.இதன்போது வவுனியா இபோச வீதி முகாமையாளர் M. Y. M ரலீம் மற்றும் துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரசன்னமாகியிருந்ததுடன் பயணிக்களால் கெளரவிப்பு ஒன்றும் இடம்பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version