Home » குஜராத் மாநிலத்தில் சாப்பிட்டால் அதிர்ஷ்டம்- 26 கல்லறைகளுக்கு நடுவில் லக்கி ஓட்டல்

குஜராத் மாநிலத்தில் சாப்பிட்டால் அதிர்ஷ்டம்- 26 கல்லறைகளுக்கு நடுவில் லக்கி ஓட்டல்

by newsteam
0 comments
குஜராத் மாநிலத்தில் சாப்பிட்டால் அதிர்ஷ்டம்- 26 கல்லறைகளுக்கு நடுவில் லக்கி ஓட்டல்
9

கல்லறைகளுக்கு நடுவில் அமைந்துள்ளதால் இங்கு சாப்பிட அந்த பகுதி மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் லால் தர்வாசா பகுதியில் 26 கல்லறைகளின் மத்தியில் லக்கி உணவகம் என்ற ஓட்டல் இயங்கி வருகிறது. உள்ளூர்வாசிகள் உட்பட பல பிரபலங்கள் இந்த உணவகத்திற்கு வருகை தருகின்றனர்.
கல்லறைகளுக்கு நடுவில் அமைந்துள்ளதால் இங்கு சாப்பிட அந்த பகுதி மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் இங்கு சாப்பிட்டால் அதிர்ஷ்டம் எனவும் நம்பப்படுகிறது. ஓட்டல் நாள் முழுவதும் பரபரப்பாக காணப்பகிறது.கடந்த காலங்களில் பிரபல ஓவியர் எம்.எப் ஹுசைன் மற்றும் ராகுல் காந்தி எம்.பி. ஆகியோர் இங்கு டீ குடித்துள்ளனர்.
ஊழியர்கள் அனைத்து கல்லறைகளிலும் பூக்களைத் தூவி ஒவ்வொரு நாளும் பதேஹா ஓதுவார்கள். இந்த உணவகம் 1950-ம் ஆண்டு முகமது பாய் என்பவரால் நிறுவப்பட்டது.இது ஒரு கல்லறைக்குள் கட்டப்பட்டது என்று 17 ஆண்டுகளாக இங்கு காசாளராகப் பணியாற்றி வரும் ரசாக் மன்சூரி கூறினார்.ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஓட்டலில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் இந்த உணவகம் இந்து மற்றும் முஸ்லிம் ஒற்றுமையின் சின்னம் என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version