மக்களின் காணி சுவீகரிப்பு வர்த்தமானி மீளப்பெறப்படுவதை அரசு 28க்கு முன் உறுதி செய்ய வேண்டும்.தவறினால் நாட்டை மட்டுமல்ல உலகையே உலுக்குமளவு போராட்டம் மேற்கொள்ளப்படுமென இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் இன்று (16) தெரிவித்துள்ளார்.இப்போராட்டத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களுடன் அனைத்து அரசியற் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.