புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.பிரியந்த வீரசூரிய, பொலிஸ் துறையில் நீண்டகால சேவை அனுபவம் பெற்றவர் என்பதுடன், பல முக்கிய பிரிவுகளின் தலைமை பொறுப்புகளையும் வகித்துள்ளார்.அவரது தலைமையில், சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.