மட்டக்களப்பு நகரின் உணவகம் ஒன்றில் வாங்கிய மதிய உணவுப் பொதி ஒன்றில் புழு இருந்ததைக் கண்டு, சட்டத்தரணி ஒருவர் சுகாதார அதிகாரிகளுக்கு நேற்று (24) முறைப்பாடு அளித்துள்ளார்.இதையடுத்து, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உடனடியாக குறித்த உணவகத்தைச் சோதனையிட்டு, அங்கு மனித பாவனைக்கு ஒவ்வாத உணவு தயாரிக்கும் பொருட்களை மீட்டதுடன், குறித்த உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யவுள்ளதாகத் தெரிவித்தனர்.மேலும், மீட்கப்பட்ட மனித பாவனைக்கு ஒவ்வாத பொருட்களைக் கொண்டு உணவு தயாரிக்க வைத்திருந்தமை மற்றும் மதிய உணவுப் பொதியில் புழு இருந்தமை தொடர்பாக, உணவகத்தின் உரிமையாளர் மீது 2 குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக நாளை (26) நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.