Home » இந்தியாவின் வான் பாதுகாப்பு பொறிமுறையை அழித்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவிப்பு

இந்தியாவின் வான் பாதுகாப்பு பொறிமுறையை அழித்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவிப்பு

by newsteam
0 comments
இந்தியாவின் வான் பாதுகாப்பு பொறிமுறையை அழித்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவிப்பு
9

பாகிஸ்தான் – இந்தியா மோதலால் இரு நாட்டு மக்களும் அச்சத்தில் உள்ள நிலையில், இந்தியாவின் வான்பாதுகாப்பு பொறிமுறையை அழித்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளமை போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.இந்தியாவின் எஸ் 400 வான்பாதுகாப்பு அமைப்பினை அழித்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவின் இணையத்தளம் உட்பட பல இந்திய இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.இதேவேளை ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் வெடிப்புச்சத்தங்கள் கேட்டதாகவும் ஜெட் விமானம் பறப்பது போல சத்தங்கள் கேட்டதாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பி.பி.சி.க்கு தெரிவித்துள்ளனர்.அதேவேளை விமானம் தென்பட்டு சில நிமிடங்களின் பின்னர் வெடிப்பு சத்தம் கேட்டதாகவும் புகை மண்டலம் தென்பட்டது எனவும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version