Home » பல்கலை மாணவனை பகிடிவதைக்கு உட்படுத்திய நால்வர் CIDயால் கைது

பல்கலை மாணவனை பகிடிவதைக்கு உட்படுத்திய நால்வர் CIDயால் கைது

by newsteam
0 comments
பல்கலை மாணவனை பகிடிவதைக்கு உட்படுத்திய நால்வர் CIDயால் கைது
7

களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் நான்கு மாணவர்கள் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் புதன்கிழமை (27) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்களான பல்கலை மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்டவர்கள் வெல்லவாய, ஹபரணை, வவுனியா மற்றும் மஹகிரில்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.பகிடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று பல்கலை மாணவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version